சனி, ஜனவரி 28, 2012

பேஸ்புக்:ராணுவத்தினருக்கு இறுதி எச்சரிக்கை !

புதுடெல்லி:ட்விட்டர்,பேஸ்புக்,ஆர்குட் உள்பட பல்வேறு சமூக இணையதளங்களில் தங்களின் ஃப்ரொஃபைல்களில் இருந்து ராணுவம் தொடர்பான தனிப்பட்ட விபரங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை நீக்கம் செய்ய ராணுவ அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. மூன்று மாதத்திற்குள் தகவல்களை நீக்கம் செய்ய கடந்த அக்டோபர் மாதம் ராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. கால அவகாசம் முடிய இன்னும் சில நாட்களே இருக்கும்
நிலையில் உரிய கால அவகாசத்தில் தகவல்களை ஃப்ரொஃபைலில் இருந்து நீக்காத ராணுவ வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் தரைப்படையைச் சார்ந்த ஏராளமான ராணுவ வீரர்கள் சோசியல் நெட்வர்க்கில் உள்ள தங்களுடைய ஃப்ரொஃபைல்களில் ராணுவத்தில் உள்ள பொறுப்பு மற்றும் ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்களை சேர்த்துள்ளனர். அதேவேளையில் இத்தகைய இணையதளங்களை உபயோகிப்பதை ராணுவம் தடுக்கவில்லை எனவும், சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேஸ்புக் மூலமாக தகவலை கசியவிட்ட குற்றச்சாட்டில் விசாரணைச் செய்யப்பட்ட நான்கு கடற்படை அதிகாரிகள் குற்றவாளிகள் என அண்மையில் விசாரணை கமிஷன் கண்டுபிடித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக