சனி, ஜனவரி 28, 2012

இஸ்ரேலிடம் 300 அணு ஆயுதங்கள் உள்ளன-அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் அதிரடி அறிவிப்பு !

ஈரானின் அணுசக்தி பரப்புரைச் செய்வது போல் கவலை அளிப்பது அல்ல என்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் தெரிவித்துள்ளார். டைம் இதழுக்கு அளித்த பேட்டியில் கார்டன் இதனை தெரிவித்துள்ளார். அவர் கூறியது: அணு ஆயுதம் தயாரிக்கமாட்டோம் என உறுதியாக மத உணர்வு மிக்க ஈரான் ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். அவர்கள் அதனை மீறுவார்கள் என கருதவில்லை. தாங்கள் அணு ஆயுதத்தை தயாரிக்கவில்லை என தொடர்ந்து அவர்கள் கூறி வருகிறார்கள்.
ஒருவேளை, அவர்கள் கூறுவது பொய்யாக இருந்தால் கூட அது ஒரு அபாயமாக மாறும் என கருதமுடியாது. ஒன்று அல்லது இரண்டு அணு ஆயுதங்களை தவிர அதற்கு அதிகமாக அணு ஆயுதங்களை ஈரானுக்கு தயாரிக்க முடியாது.
அதேவேளையில், இஸ்ரேலிடம் ஏறத்தாழ 300 அணு ஆயுதங்கள் இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இஸ்ரேலின் எதிர்காலம் குறித்து எனக்கு நல்ல எதிர்பார்ப்பு இல்லை. அந்த நாடு உருவான பிறகு மேற்காசியாவில் தற்போதைய சூழலைப்போல முன்பு அமெரிக்காவின் மீதான செல்வாக்கு குறையவில்லை.
ஃபலஸ்தீன் மக்களை கூட்டுப் படுகொலைச் செய்யும் இஸ்ரேலை ஆதரிப்பதன் மூலம் அமெரிக்கா மீதான நம்பிக்கை அரபுலகத்தில் மங்கிப்போனது. எனக்கு பிறகு அமெரிக்காவின் அதிபர்களாக வந்தவர்கள் எல்லாம் போர் விரும்பிகளாகவே இருந்தனர். உலகத்தின் பிரச்சனைகளை தீர்க்க போர் மூலம் முடியாது. அமைதியின் மூலமாகத்தான் உலகின் பிரச்சனைகளை தீர்க்க இயலும்.
நமது செல்வங்களில் இருந்து மிகவும் குறைந்த அளவு கூட உலகில் பிறருக்கு வழங்க நாம் முன்வருவதில்லை. அமெரிக்காவில் அரசியல்வாதிகள் கிறிஸ்தவ துருப்புச் சீட்டை இறக்கி விளையாடுவதில் கெட்டிக்காரர்கள் என்று ஜிம்மி கார்டர் கூறியுள்ளார்.
87 வயதான ஜிம்மி கார்டர் 2002-ஆம் ஆண்டில் சமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்றவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக