சென்னை: இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை தமிழக டியுசிஎஸ் கடைகளில் விற்க வேண்டாம் என்றும், விற்பனைக்கு வைத்துள்ள இலங்கைப் பொருள்களை அகற்றிவிடுமாறும் நகர கூட்டுறவு சங்கம் உத்தரவு பிறப்பிப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு நகர கூட்டுறவுச் சங்கங்களின் மூத்த அலுவலர் சக்தி சரவணன்
இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
"இலங்கைப் பொருள்களைப் புறக்கணிப்போம்" என்ற அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையை வழிக்குக் கொண்டுவர, அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே தீர்மானம் கொண்டுவந்தது நினைவிருக்கலாம்.
ஆனால் கூட்டுறவுக் கடைகளில் இலங்கை பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட, "இலங்கைப் பொருள்களைப் புறக்கணிப்போம்" குழுவினர், இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அரசு நகர கூட்டுறவுச் சங்கங்களின் கடைகளின் முன்னால் உள்ள அலுமாரிகளிலிருந்து அந்தப் பொருள்கள் அகற்றிவிடுமாறும், இனி இலங்கை தயாரிப்புகளை விற்பனைக்கு வைக்க வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கையில் உற்பத்தியாகும் பிஸ்கட், சாக்கலேட், மருந்துப் பொருள்கள் போன்றவை கடந்த இரு ஆண்டுகளாகவே தமிழகத்தில் பெரிதாக விற்பனையாகாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக