ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர், 1913-ம் ஆண்டு வரைந்த ஓவியம் ஸ்லோவாகியா நாட்டின் ஏல நிறுவனம் ஒன்றின் சார்பில் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. இது குறித்து டார்டே என்ற ஏல நிறுவனத்தின் உரிமையாளர் ஜாரோஸ்லாவ் கிராஜ்னிக் வியாழக்கிழமை கூறியது:÷"மாரிடைம் நாக்டர்னோய்ஸ்' என்ற தலைப்பில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதில், ஜொலிக்கும் கடற்பரப்பில் முழு நிலவு தெரியும் காட்சி இடம்பெற்றுள்ளது. ஒரு ஓவியக் கலைஞராக ஆக வேண்டும் என்று வியன்னாவில் ஹிட்லர் கடுமையாக முயற்சி செய்து வந்த காலத்தில் இதை வரைந்ததாகத் தெரிகிறது. ÷இந்த ஓவியத்துக்கான ஆரம்ப விலை 10 ஆயிரம் யூரோ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை பொது ஏலமாக நடத்தாமல், நான்கு முக்கிய பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஓவியத்தை பெயர் வெளியிட விரும்பாத ஓவியரின் குடும்பம் ஒன்றின் சார்பில் ஏலத்தில் விடுகிறோம். இந்தக் குடும்பத்தினர் வைத்திருந்த ஹிட்லர் வரைந்த ஓவியம் ஒன்றை ஏற்கெனவே ஏலத்தில் விற்பனை செய்துள்ளோம்.
÷மேலும், உலகப் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாúஸாவின் ஓவியம் ஒன்றையும் (விலை 15 மில்லியன் யூரோ) விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளோம் என்றார் ஜாரோஸ்லாவ் கிராஜ்னிக்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக