வெள்ளி, ஜனவரி 27, 2012

தாழ்த்தப்பட்ட சமூகச் சிறுவன் பனியன் அணிந்ததால் 50 வீடுகள் எரிப்பு !

 போலங்கிர், ஜன.27-நம் நாடு ஜனநாயகக் குடியரசு ஆனதன் 63ஆவது ஆண்டு விழா நேற்று (ஜன.26) கொண்டாடப் பட்டது. ஆனால் இன்றும் தாழ்த்தப்பட்ட வர்களைப் பார்த்து ரத்தம் சொட்டும் கோரப் பற்களைக் காட்டிச் சிரித்துக் கொண்டிருக் கிறது உயர்சாதி ஆதிக்க வெறி! தீண்டாமைக் கொடுமையும், சாதிய ஒடுக்குமுறையும் எந் தெந்த வடிவங்களில் எல்லாம் வெளிப்படும் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அள வுக்கு கோரமான முறை யில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இப் போது சாதிவெறி தன் கோர முகத்தை காட்டி யிருக்கும் மாநிலம் ஒடிசா. ஆதிக்க சக்தி களின் மனதுக்குள் உறைந் திருக்கும் சாதி வெறி தற்செயலான ஒரு சம் பவத்தை தலித்துகளுக்கு எதிரான திட்டமிட்ட ஒரு பெரும் வன்முறை யாக அரங்கேற்றிக் காட் டியிருக்கிறது அங்கே! போலாங்கிர் மாவட் டத்தைச் சேர்ந்த லாத் தூர் என்ற ஊரில் 22ஆம் தேதி பகல் 3 மணியளவில் இந்த வன் முறை கோரத் தாண் டவம் அரங்கேற்றப்பட் டிருக்கிறது. 

9ஆம் வகுப்பு படிக் கும் தாழ்த்தப்பட்ட மாணவன் கணேஷ் சுனா. சம்பவத்தன்று புதுச் சட்டை வாங்குவ தற்காக உள்ளூரில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்குச் சென்றிருக் கிறார். கடையில் அந்த மாணவர் விசாரித்துக் கொண்டிருந்தபோது அவர் சட்டைக்கு உள்ளே பனியன் அணிந் திருப்பதை உயர்சாதியைச் சேர்ந்த அந்தக் கடைக் காரர் பாரத் மெஹர் கவனித்திருக்கிறார். தாழ்த்தப்பட்ட மாணவன் பனியன் அணிந்திருப்பதா என்று சாதிவெறுப்பின் உச்சத் துக்கே சென்றிருக்கிறார். 

அதை நேரடியாகச் சொன்னால் தன் உண்மை முகம் வெளிப் பட்டு விடும் என்பதால், அந்த மாணவர் கடை யில் திருட முயன்றார் என்று குற்றஞ்சாட்டியி ருக்கிறார். அவரது சகோதரர் தயா மெஹர் என்பவரும் சேர்ந்து  கொண்டு கணேஷ் சுனா திருடன்தான் என்று சொல்லி கடுமையாகத் தாக்கியுள்ளனர். கொலை செய்து விடு வோம் என்றும் மிரட் டினர்.

கடுமையான தாக்கு தலுக்கு ஆளாகி மன உளைச்சலுடன் வீட் டுக்குச் சென்ற சுனா, அங்கிருந்த தாத்தா கவுரங்க சுனாவிடம் தனக்கு ஏற்பட்ட கதி யைக் கூறி அழுதிருக் கிறார். இதைக் கேட்டுப் பொறுக்க முடியாமல் கௌரங்க சுனா அந்த கடைக்குச் சென்று விசாரித்திருக்கிறார்.

அவர் வந்து விசாரித் ததைக் கூட ஏற்க முடி யாமல் உச்சக்கட்ட கோபத்துக்குச் சென்ற மெஹர் சகோதரர்கள் அவரையும் சாதியைச் சொல்லி திட்டியதுடன், செருப்பால் அடித்து உதைத்தனர். 

ஜாதி வெறிக் கூட்டத்தின் தாக்குதல்

அவமானம் தாங்காத முதியவர் கூனிக்குறுகி வலியும் பொறுக்க முடி யாமல் ஒருவாறு வீட் டுக்குப் போய்ச் சேர்ந்தி ருக்கிறார். சிறுவனுக்கு நேர்ந்த கதியைக் கேட் கப் போய் தனக்கு நேர்ந்த நிலையையும் அவர் விளக்கியவுடன், அங்கிருந்த இளைஞர் கள் 10 பேர் அந்த கடைக்குச் சென்று நியா யம் கேட்டுள்ளனர். 

ஆனால் அவர்களிடம் பேசத்தயாராக இல் லாத உயர்சாதி ஆதிக்க வெறியர்கள், சுற்று வட்டாரத்தில் இருந்த உயர்சாதியினரை கூட் டம் சேர்த்துக் கொண்டு அந்த இளைஞர்களைத் தாக்கத் தொடங்கினர். நூறு பேருக்கு மேல் சேர்ந்து கொண்டு கத்தி, கம்பு உள்ளிட்ட கூர் மையான ஆயுதங் களைக் கொண்டு அவர் களைத் தாக்கத் தொடங் கியதும், உயிர் தப்பி னால் போதும் என அந்த இளைஞர்கள் தப்பி ஓடினர்.

தாழ்த்தப்பட்டவர்கள் நியாயம் கேட்பதா என்று வெறிபிடித்தவர் களாக சாதி ஆதிக்க சக் திகள் பெரும் கூட்ட மாகச் சேர்ந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பை நோக்கிச் சென்றனர். எதிர்வரும் விபரீதத்தைப் புரிந்து கொண்ட தாழ்த்தப் பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பி ஓடினர். 

அங்கே வந்த சாதி வெறியர்கள் தாழ்த் தப்பட்ட மக்கள் யாருமே இல்லாததைப் பார்த்து மிளகாய் தின்ற குரங்காக மாறி அந்த குடியிருப்பில் இருந்த பொருள்களைச் சூறை யாடினர். அங்கிருந்த பொருள்களையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப் பட்டன.

பெட்ரோல் ஊற்றித் தீ!

வன்முறை வெறியாட் டம் ஆடிய குண்டர்கள் கைகளில் ஏற்கெனவே தயார்நிலையில் பெட் ரோல் கேன்களையும் கொண்டு சென்றனர்.

இதில் தாழ்த்தப்பட்ட மக்கள்தங்கள் வாழ்க்கை முழுவதும் சிறுகச் சிறுக சேமித்த பொருள்கள் முழுமையாக நாச மாகின. அய்ந்து கோடி ரூபாய் மதிப்புள்ள அனைத்துச் சொத்துக் களும் தீக்கிரையாக்கப் பட்டு விட்டன. இனி மறுபடியும் புதிதாக வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய நிலைக்கு அந்த தாழ்த் தப்பட்ட மக்கள் மாற் றப்பட்டிருக்கின்றனர். தாழ்த்தப்பட்ட ஆண் கள் எல்லோரும் கண் காணாத இடத்துக்குச் சென்று தலைமறைவாகி விட்டனர். 

பெண்களோ தங்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள் ளனர். இவர்களுக்காக அருகிலுள்ள பள்ளிக் கூடத்தில் அமைக்கப் பட்ட முகாமில் சிலர் தங்கியுள்ளனர். இதற் கிடையே லாத்தூரை நோக்கி வரும் அனைத் துச் சாலைகளையும் முற்றுகையிட்டு உயர் சாதி வெறியர்கள் போக் குவரத்தைத் தடுத்து நிறுத்திவிட்டனர்.

எந்த வகையிலும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு எவ் வித நிவாரணமும் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த ஏற்பாடும்.ஆனால் இவ்வளவு நடந்தும் ஒடிசா மாநில அரசோ, காவல் துறை நிருவா கமோ குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாது காப்பும் கொடுக்க வில்லை. ஆனால் இந்த சம்பவம் ஒடிசா மட்டு மல்லாது பிற பகுதி களில் இருக்கும் தலித் மக்களிடமும் காட்டுத்தீ போல் வேகமாகப் பரவி வருகிறது.இது போராட் டப் பெரு நெருப்பாக மாறி ஆதிக்க சக்திகளின் சாதி வெறியைப் பொசுக் கிச் சாம்பலாக்கப் போவது நிச்சயம். 

இந்த தாக்குதலில் ஈடுபட்ட குறிப்பிட்ட உயர்சாதி யினர் அனை வரும் பாரதிய ஜனதா கட்சி யைச் சேர்ந்தவர் கள் ஆவர். தாக்குத லுக்கு உள்ளான தாழ்த் தப் பட்ட மக்கள் பெரும் பாலோர் இந்து மதத் தில் இருந்து அண்மை யில் புத்த மதத்துக்கு மதம் மாறியவர்கள் ஆவர்.

உயர்சாதியினர் மதவெறி பாரதிய ஜன தாவை சேர்ந்தவர்களாக வும், தாழ்த்தப்பட்ட மக்கள் புத்த மதத்திற்கு மாறியதற்கும், தற்போது அரங்கேற்றப்பட்டிருக்கும் வன்முறை வெறியாட் டத்திற்கும் நிச்சயமாகத் தொடர்பு இருக்கிறது என்று இச்சம்பவத்தைப் பார்த்த பத்திரிகையா ளர்கள் கூறுகின்றனர்.

உள்ளூரில் பெட் ரோல் பங்க் வைத்திருப் பவர் உயர்சாதிக்காரர் தான்.அவரது பெட் ரோல் பங்க்கில் இந்த குண்டர்களுக்கு வீடு களை எரிப்பதற்குத் தேவையான பெட் ரோல் இலவசமாக, தாராளமாக வழங்கப் பட்டிருக்கிறது. அதைக் கொண்டு வந்து வீடு களை எரித்துச் சாம்ப லாக்கினர். தீயை அணைக்க வந்த தீய ணைப்பு வாகனத்தை யும் தீவைத்து எரித் துள்ளனர் வெறியர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக