செவ்வாய், ஜனவரி 31, 2012

சட்டசபை தேர்லில் உத்தரகண்டில் 70%, பஞ்சாபில் 77% வாக்குப்பதிவு . .

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நேற்று நடந்த சட்டசபை தேர்லில் 77 சதவீத வாக்குகள் பதிவாயின. அதேபோல், உத்தரகண்டில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. மணிப்பூரில் கடந்த 28ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்நிலையில் பஞ்சாப், உத்ரகண்ட் மாநிலங்களில் நேற்று தேர்தல் நடந்தது.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. பனி காரணமாக மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு பின் விறுவிறுப்பாக நடந்தது. ஒரு சில சம்பவங்களை தவிர தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. பஞ்சாப்பில் 117 தொகுதிகளில் ஆயிரத்து 78 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 1.76 கோடி வாக்காளர்கள் உள்ள பஞ்சாப்பில் 77 சதவீத வாக்குகள் பதிவானது.

உத்தரகண்டில் 70 தொகுதிகளில் 788 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு பா.ஜ - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்குள்ள 63 லட்சம் வாக்காளர்களில் சுமார் 70 சதவீதம் பேர் வாக்களித்ததாக மாநில தேர்தல் அதிகாரி ராதா ரதுரி தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக