திங்கள், ஜனவரி 30, 2012

முஸ்லிம்களுக்கு எதிராக எழுத மாட்டேன் : கோர்டில் எழுதி கொடுத்த சாமி

  இஸ்லாமியர்கள் குறித்து துவேஷத்தைத் தூண்டும் வகையில் கட்டுரை எழுதிய வழக்கில், இனிமேல் அதுபோல எழுத மாட்டேன் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தைக் கொடுத்ததால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. இந்தியாவில் வசிக்கும் முஸ்லீம்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு துவேஷக் கருத்துக்களுடன் கூடிய கட்டுரையை எழுதியதால் சாமி மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து அவர் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார். அங்கு இன்று அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக இனிமேல் இதுபோன்ற கட்டுரைகளை எழுத மாட்டேன் என்று சாமி எழுதிக் கொடுத்தார்.

இதைப் பாராட்டிய நீதிபதி எம்.எல்.மேத்தா, பொறுப்புடன் நடந்து கொண்டுள்ளீர்கள். இதைக் கடைப்பிடிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறி முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். மேலும் கைது செய்யப்பட்டால் ரூ. 25,000 ரொக்க ஜாமீனில் வெளிவரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக