ஞாயிறு, ஜனவரி 29, 2012

இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்: சரத்பவார் !

மத்திய வேளாண்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவார் இந்திய தேசியக் காங்கிரஸில் இருந்து பிரிந்த பிறகு 1999 ஆம் ஆண்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவி அதன் தலைவரானார்.
சரத்பவார்,  இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக முன்பு பதவி வகித்தார். தற்போது இந்திய அரசாங்கத்தின் விவசாய அமைச்சர் மற்றும் நுகர்வோர் பொருட்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சராகப் பதவி வகிக்கிறார் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "1967 முதல் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்காக ஓய்வில்லாமல் உழைத்து வருகிறேன்"
என்று குறிப்பிட்ட சரத்பவார்,

"இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்த வேண்டுமென்பதற்காக வரும் 2014 லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்" என்று தெரிவித்தார்.

"இது வரை நான் எந்த தேர்தலிலும்தோற்றதில்லை. இளைஞர்களுக்கு வழிவிடும் பொறுப்புணர்ச்சி எனக்கு உள்ளது" என்றார்.

சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி.யாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக