உத்தரகாண்ட் மாநிலம் விசாக்நகரில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தியை நோக்கி ஷூ வீசப்பட்டது. ராகுல் காந்தியை நோக்கி வீசப்பட்ட அந்த ஷூ, அவர் இருந்த இடத்தில் இருந்து 10 மீட்டர் தொலைவில் வந்து விழுந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
போலீஸாரிடம் பிடிபட்ட குல்தீப்பை காங்கிரஸ் தொண்டர்கள் தாக்க முயன்றபோது, "அவரை அடிக்காதீர்கள்," என்று ராகுல் காந்தி மேடையில் இருந்தபடி கட்டளையிட்டிருக்கிறார்.
மேலும், "ஒரு ஷூவை வீசுவதன் மூலம் என்னைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்றும், நான் ஓடிவிடுவேன் என்றும் சிலர் நினைக்கின்றனர். அவர்கள் எண்ணம் நிறைவேறாது. நான் எங்கும் ஓடிவிட மாட்டேன்," என்றார் ராகுல்.
ஆளும் பிஜேபி வலுவாக உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில், அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக