செவ்வாய், ஜனவரி 24, 2012

ருஷ்டி:வீடியோ கான்ஃபரன்சிங்கை அனுமதிக்கமாட்டோம் – போலீஸ்

சல்மான் ருஷ்டிஜெய்ப்பூர்:சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலமாக ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் உரையாற்றுவதற்கு அனுமதிக்கமாட்டோம் என ராஜஸ்தான் போலீஸ் அறிவித்துள்ளது. முன் அனுமதி இல்லாமல் வீடியோ கான்ஃபரன்ஸிற்கு அனுமதிக்கமாட்டோம் என போலீஸ் கூறுகிறது. ருஷ்டியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்ததை
தொடர்ந்து அவர் இலக்கிய திருவிழாவில் பங்கேற்கவில்லை.
இன்று இலக்கிய திருவிழாவின் இறுதி நாள் என்பதால் நிகழ்ச்சியில் ருஷ்டி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாக உரையாற்றுவார் என முக்கிய நிகழ்ச்சி தயாரிப்பாளர் சஞ்சய் ராய் அறிவித்தார்.
வீடியோ கான்ஃப்ரன்ஸிங்கிற்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அனுமதி வாங்கவில்லை என கூடுதல் போலீஸ் கமிஷனர் பிஜு ஜார்ஜ் ஜோஸஃப் கூறினார். அமைப்பாளர்களின் நடவடிக்கையை கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.
வீடியோ கான்ஃபரன்ஸிங் நடத்துவது கூடாது என அதிகாரப்பூர்வ அறிக்கை தங்களுக்கு கிடைக்கவில்லை என சஞ்சய் ராய் கூறியுள்ளார். இதுவரை எந்த அரசு அதிகாரியும் இதுகுறித்து தங்களிடம் ஆட்சேபம் குறித்து தெரிவிக்காததால், ருஷ்டியின் விடியோ கான்ஃபரன்சிங் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக