தென் கொரியாவின் வடபகுதியில், சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் கப்பல் இரண்டாக உடைந்தது. இதில் கப்பலில் இருந்த ஐந்து பேர் பலியாயினர்.தென் கொரியாவின் வடபகுதியில், இன்ஷியோன் துறைமுகத்தில் இருந்து 32 கி.மீ., தொலைவில் உள்ள ஜவோல் தீவுக்கருகில் நேற்று தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு எண்ணெய் சரக்குக் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் கப்பலில் இருந்த ஒரு மியான்மர் நாட்டவர், இரு தென் கொரியாவினர் உள்ளிட்ட ஐந்து பேர் தீயில் கருகி பலியாயினர். எண்ணெய் வைக்கப்பட்ட பகுதியில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
தீ விபத்தை அடுத்து ஏற்பட்ட அதிர்வில், கப்பல் இரண்டாக உடைந்தது. இதுகுறித்து தென் கொரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக