செவ்வாய், ஜனவரி 24, 2012

அமெரிக்காவில் பூசாரி வேலை: ரூ 1,60,000 மோசடி !

பூசாரி வேலை: 1 லட்சத்து 60 ஆயிரம் மோசடிஉருளையன்பேட்டையைசேர்ந்தவர் பாலகுருக்கள். இவரை  காரைக்குடியைச் சேர்ந்த அஜித்குமார்  என்பவர் தொடர்பு கொண்டு  அமெரிக்காவில் உள்ள விநாயகர் கோயிலுக்கு பூசாரி மற்றம் தவில் வித்துவான்கள் தேவை என்றும், பூசாரிக்கு ரூ.1 லட்சமும், தவில் வித்துவான்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கான பாஸ்போர்ட் மற்றும் விசா செலவுகளுக்காக தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்
என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பிய பாலகுருக்கள், தனக்குத் தெரிந்த பூசாரி மற்றும் தவில் வித்துவான்கள் 4 பேரிடமிருந்து பணம் வசூலித்து, தனது பணத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.1.60 லட்சத்தை அஜித்குமாரிடம் கொடுத்துள்ளனர்.

பின்னர் பாலகுருக்கள்  அஜித்குமாரை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த. இது குறித்து தனது உறவினர் மொரட்டாண்டியைச் சேர்ந்த சீத்தாராம குருக்களிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் சீத்தாராம குருக்களுக்கும் அஜித்குமாரிடம் இருந்து போன் வந்தது. வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக அஜித்குமார் கூறியதும் உஷாரடைந்த சீத்தாராமன், இதுகுறித்து புதுச்சேரியில் இருக்கும் பாலகுருக்களுக்குத் தகவல் தெரிவித்தார்.

பாலகுருக்களும், சீத்தாராமனும் காவல்துறையிடம் புகார் அளித்தனர், பின்னர் காவல்துறையினர் தந்த  அறிவுரைப்படி, பணத்தை மொரட்டாண்டி வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று சீத்தாராம் குருக்கள் அஜித்குமாரிடம் தெரிவித்தார்.

பணத்தை பெற மொரட்டாண்டி வந்த காரைக்குடியைச் சேர்ந்த அஜித்குமார், அருணாச்சலம், அரக்கோணம் ராமகிருஷ்ணன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக