அயர்லாந்தைச் சேர்ந்த விலங்கு உரிமைகள் அமைப்பு ஒன்று, தமிழகத்தின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை எதிர்த்து, பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளது.
தமிழகத்தின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு குறித்து, விலங்குகள் நல அமைப்பான, "பீட்டா' தொடுத்த வழக்கில், மதுரை ஐகோர்ட் அளித்த இடைக்கால தீர்ப்பின்படி, பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு, சமீபத்தில் ஜல்லிக்கட்டு
நடந்து முடிந்தது. இந்நிலையில், அயர்லாந்தைச் சேர்ந்த, "விலங்கு உரிமைகள் நடவடிக்கை அமைப்பு' (ஏ.ஆர்.ஏ.என்.,), மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோந்த் சகாய்க்கு அனுப்பிய கடிதத்தில் எழுதியிருப்பதாவது: விலங்குகளை மதிப்புடன் நடத்துவதில், இந்தியா முன்னணியில் உள்ளது.
எனினும், ஜல்லிக்கட்டைப் பொறுத்தவரையில், அடித்தல், குத்துதல், வாலைத் திருகுதல், இழுத்தல், கொம்புகளை உடைத்தல் போன்ற செயல்களும், நிகழ்ச்சிகளுக்கு முன், காளைகளுக்கு வலுக்கட்டாயமாக சாராயம் புகட்டுதலும் தொடர்கின்றன. இதை உடனடியாக நிறுத்தாவிட்டால், இதற்கு எதிராக நாங்கள் பிரசாரம் செய்வோம்.
இந்தியாவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளிடம், இதை எடுத்துச் சொல்லி, இந்தியாவைப் புறக்கணிக்கும்படி வலியுறுத்துவோம். இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக