சில நிமிடங்களுக்கு பிறகு அதே மாவட்டத்தின் இன்னொரு பகுதியில் வெடிகுண்டு ஏற்றி வந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் 3 பேர் பலியாகினர், 26 பேர் காயம் அடைந்தனர்.
அதன்பிறகு ஷூலா பகுதியில் உள்ள உயர்நிலை பள்ளி அருகே காலை 10.30 மணிக்கு வெடிகுண்டு நிரப்பப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் 2 பள்ளி மாணவர்கள் பலியாகினர். மேலும் 16 மாணவர்கள் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அதேபோல ஹூரியா மாவட்டத்தில் உள்ள பரபரப்பான வியாபார பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியது. இதில் ஒருவர் பலியானார். 13 பேர் காயம் அடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக