வியாழன், ஜனவரி 19, 2012

பத்து வயதான சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த பிரிட்டிஷ் இராணுவம் !

பிரிட்டன்  இராணுவத்தினர் மீது சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 10 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இரண்டு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சிறுவன், சிறுமியின் ஆடைகளைக் களைந்து குற்றம் புரிந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

துஷ் பிரயோகக் காட்சிகளை இராணுவத்தினர் படமாக்கி தங்களது லப்ரொப்புகளில் தரவேற்றி உள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பிரிட்டிஷ் பிரதமரான டேவிட் கமரூன் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்தச் சம்பவத்தால் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்துள்ளேன்.
இந்த விடயம் உடனடியாக பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. என்றார்.
மேலதிக புலன் விசாரணைகளை இராணுவப் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக