- பாரதிய ஜனதாவின் மிரட்டலுக்கு மத்திய அரசு ஒருபோதும் அடிபணியாது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
- நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ள சோனியா காந்தி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்திலேயே பாரதிய ஜனதா செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். ஆனால் இந்த மிரட்டலுக்கு அரசு ஒருபோதும் அடிபணியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவை தடுப்பதற்காகவே பாரதிய ஜனதா நாடாளுமன்றத்தை முடக்குவதாகவும் சோனியா குற்றம்சாட்டியுள்ளார்.
- ஆனால் ஊழல் புகார்களில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர்கள் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த விட மாட்டோம் என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அர-சுக்கு எதிரான இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும் பாரதிய ஜனதா கூறியுள்ளது. காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி மோதலால் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறுதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கனவு திட்டமான உணவு பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதால், நாடாளுமன்றத்தில் இன்று அமளி நீடித்தாலும் மசோதா மீது விவாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.3
செவ்வாய், மே 07, 2013
பாரதிய ஜனதாவின் மிரட்டலுக்கு மத்திய அரசு ஒருபோதும் அடிபணியாது !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக