செவ்வாய், மே 07, 2013

2 ஆம் முறையாக மலேசிய பிரதமர் பதவியேற்றார் நஜிப் !

  • மலேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் நஜிப் ரசாக் தலைமையிலான தேசிய முன்னணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. 
  •  
  • தொடர்ந்து 56 ஆண்டுகளாக ஆட்சி யில் இருக்கும் தேசிய முன்னணி, மொத்த முள்ள 222 நாடாளுமன்ற இடங்களில் 133 இடங்களை வென்றது. எதிர்க்கட்சிக் கூட்டணி 89 இடங்களில் வெற்றி பெற்றது.
  •  

  • மலேசியப் பேரரசர் அப்துல் ஹலிம் முவாத்ஸம் ஷா முன்னிலையில் நேற்று நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் உறுதி மொழி எடுத்துக்கொண்டு, இரண்டாவது முறையாக அந்நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றார் திரு நஜிப், 59. தேர்தல் வெற்றிக்குப் பிறகு பேசிய திரு நஜிப், “ஒட்டுமொத்தமாக, இனப் பிளவு ஏற்படுவதைக் காட்டும் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்தைக் கவலைகொள்ளச் செய்து உள்ளது. இந்தப் பிரச்சினை விரைவில் அணுகப்படாவிடில், நாட்டில் குழப்பம் அல்லது பிரிவு ஏற்படக்கூடும்,” என்றார்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக