செவ்வாய், மே 07, 2013

அமிலமாக மாறிவரும் ஆர்க்டிக் பெருங்கடல்!

உலக முழுவதிலுமிருந்து தொழிற்சாலைகள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தால் பூமி அதிகம் வெப்பம் அடைகிறது. இதன் மாசுக்கள் காற்றில் கலந்து வெப்பமடையச் செய்வதுடன் அமிலமாகவும் மாறுகிறது. 

பூமியின் வட-தென் துருவங்களில் அதிகம் குளிர்ந்த காற்று இருப்பதால் இதில் கார்பன் டை ஆக்சைடு கலந்து கடலில் படிகிறது. இதில் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதி அதிக அமிலமாக மாறி வருகின்றது. 

தொழிற் புரட்சி ஏற்படுவதற்கு முன்பு இருந்ததை காட்டிலும் இப்போது பெருங்கடலின் மேற்பரப்பு நீர் 30 சதவிகிதம் அமிலமயமாகியுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. 

இதனால் வர்த்தக ரீதியாக அதிகம் பயன்படும் மீன்கள் ஏற்றுமதி வெகுவக பாதிக்கப்படுவதுடன், மற்ற கடல் உயிரினங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. 

இது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும். மேலும் கடல் சுற்றுச்சூழலில் என்ன பாதிப்பு நடக்கும் என்று சொல்ல முடியாத அளவிற்கு இதன் பாதிப்புகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக