செவ்வாய், மே 07, 2013

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எங்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தாது !

  • பூவுலகின் நண்பர்கள் சார்பில் அணு உலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், கூடங்குளம் திட்டத்துக்கு தடை இல்லை என நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து, கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் சக்தி இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:  உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் அணுஉலைக்கு எதிரான மக்கள் சக்தி இயக்கத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்த தீர்ப்பு சட்டப்படி எங்களை கட்டுப்படுத்தாது. நாங்கள் தீர்ப்பை ஏற்று கொள்ளவில்லை. அணுமின் நிலையம் மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

    தரமில்லாத கட்டுமானங்கள், கொதிகலங்கள் இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட இந்த அணுமின் நிலைய வளாகத்தில் பல ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. தரமற்ற கேபிள் இணைப்புகளால் மின்கசிவு, வாயு கசிவு ஏற்பட்டு 6 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மன்னார் வளைகுடா பகுதியே மாசுபடும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதன் பின்னரும் அணு கழிவுகள் எங்கே புதைப்பது, அதிலிருந்து வெளியாகவும் அணுவீச்சின் தன்மை என்ன என்பதை தெரிவிக்காமல் உள்ளனர். இந்த பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது எந்த அளவு ஏற்படும், இதற்கு அரசின் செயல்பாடு, இழப்பீடு என்ன என்பது குறித்து தீர்ப்பில் சொல்லப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக