விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தலித் மக்கள்
மீதும் அவர்களின் வீடுகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்டு
நடத்தப்பட்டது என மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் உண்மை அறியும் குழு
கண்டறிந்துள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஏப்ரல் 25-ம் தேதியன்று பாமக சார்பில் -சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா- கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு வந்த சிலர் மரக்காணத்தில் தலித் மக்களின் குடியிருப்புகள் மீது கண் மூடித்தனமான தாக்குதலை நடத்தினர்.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த பலர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்தின் உண்மை நிலையை அறிவதற்காக மக்கள் சிவில் உரிமைக் கழகம் குழு ஒன்றை அமைத்து, ஏப்ரல் 29-ம் தேதி அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தயாரித்துள்ளது.
இதுகுறித்து அந்த குழுவுக்கு தலைமை வகித்த பேராசிரியர் சரஸ்வதி அளித்த பேட்டியில்:
மரக்காணத்தில் தலித் குடியிருப்புகள் மீதான தாக்குதல் 30 நிமிடங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மாபெரும் கூட்டம் திரண்ட இந்த வன்னிய இளைஞர் பெருவிழாவுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரனே தெரிவித்தார்.இது கலவரக்காரர்களுக்கு வசதியாக இருந்துள்ளது.
பிற பிரிவினரின் வீடுகளைத் தாண்டி மறைவாக அமைந்திருக்கு தலித் வீடுகள் மட்டும் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன.இவர்களின் வீடுகளை உள்ளூர்வாசிகள் மட்டுமே அடையாளம் காட்டியிருக்க முடியும். எனவே, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்தான்.மரக்காணம் காலனி கட்டையன் தெரு, இடைகழியூர் பகுதிகளில் ஏராளமான வீடுகள் பெட்ரோல் குண்டுகள் வீசி தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. அதோடு வீடுகளில் இருந்த நகை மற்றும் பணங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
எனவே, இழப்புகளை துல்லியமாகக் கணக்கிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்றார்.3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக