சனி, மே 04, 2013

இந்திய சிறையில் நடந்த தாக்குதலால் உயிருக்கு போராடும் பாக். கைதி – சரப்ஜித் சிங் கொலைக்கு பதிலடியா?

ஜம்மு : ஜம்முவில் உள்ள சிறை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் கைதி சனாவுல்லா சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடுகிறார். சரப்ஜித் சிங் கொலைக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ஒன்றா என்று பரபரப்பு எழுந்துள்ளது.


தாக்குதலுக்கு பின் ஆபத்தான நிலையில் இருந்த 52 வயது சனாவுல்லா பல்வால் சிறைச்சாலையிலிருந்து அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டார். பின் விமான ஆம்புலன்ஸ் மூலம் சண்டிகர் மருத்துவமனைக்கு மருத்துவர்களின் ஆலோசனை படி சனாவுல்லா மாற்றப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் சியால்கோட்டை சார்ந்த சனாவுல்லா தடா சட்ட பிரிவின் கீழ் 1999 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங் சக கைதிகளால் கொலை செய்யப்பட்டு அவரின் உடல் தற்பொழுது தகனம் செய்யப்பட உள்ள நிலையில் இத்தாக்குதல் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறையில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த சனாவுல்லாவுக்கு முன்னாள் ராணுவத்தினராக இருந்து தற்போது சிறையில் உள்ள வினோத் குமாருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. உத்தரகண்டை சார்ந்த வினோத் குமாரும் அவருக்கு ஆதரவாக சிலரும் சனாவுல்லா மேல் நடத்திய தாக்குதலில் சனாவுல்லா நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளரை இடை நீக்கம் செய்துள்ள அரசு இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக