கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்: நம்பிக்கையுடன் 199 தொகுதிகளில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ-பகுஜன்சமாஜ் கட்சி கூட்டணி!
கர்நாடகா
சட்டப்பேரவை தேர்தலில் எஸ்.டி.பி.ஐ-பகுஜன் சமாஜ் கூட்டணி நம்பிக்கையுடன்
களத்தில் உள்ளது. இக்கூட்டணி 199 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பகுஜன்
சமாஜ் கட்சி 175 இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ 24 இடங்களிலும்
போட்டியிடுகின்றன. கட்சி உருவாக்கப்பட்ட பிறகு எஸ்.டி.பி.ஐ முதன் முதலாக
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
மாநகராட்சி-உள்ளாட்சி தேர்தல்களில் எஸ்.டி.பி.ஐ தனது பலத்தை
நிரூபித்திருந்தது.பெங்களூர், மங்களூர் மாநகராட்சிகளில் எஸ்.டி.பி.ஐக்கு
கவுன்சிலர்கள் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலிலும் 70க்கும் அதிகமான இடங்களை
எஸ்.டி.பி.ஐ வென்றது.
முஸ்லிம்-தலித் வாக்குகளை குறிவைத்துள்ள
எஸ்.டி.பி.ஐ-பகுஜன்சமாஜ் கட்சி கூட்டணியை முக்கிய அரசியல் கட்சிகள்
கவலையுடன் பார்க்கின்றன.
25
சதவீதம் ஒடுக்கப்பட்ட மக்கள், 14 சதவீதம் முஸ்லிம்கள் ஆகியோரின்
பிரச்சனைகளையும், உரிமைகளையும் எழுப்பி எஸ்.டி.பி.ஐ-பகுஜன் சமாஜின் புதிய
கூட்டணி களத்தில் உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியான ஆம் ஆத்மியின்
கர்நாடகா பிரிவு எஸ்.டி.பி.ஐக்கு ஆதரவு அளித்துள்ளது முக்கிய அரசியல்
கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரில் புலிகேஷ் நகர்
தொகுதியிலும், மைசூரில் நரசிம்ஹராஜா தொகுதியிலும் எஸ்.டி.பி.ஐ வெற்றிப்பெற
வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக