ஞாயிறு, ஜனவரி 06, 2013

குடிபோதையில் இளம்பெண்ணிடம் கலாட்டா செய்த பயணியை விமானத்திலேயே கட்டிப் போட்ட சகபயணிகள் !

அமெரிக்க விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர் குடிபோதையில் அருகிலுள்ள பெண்ணையும், மற்ற பயணிகளையும் தொந்தரவு செய்ததால், குடிகாரரின் வாயை பிளாஸ்டிக் டேப் ஒன்றால் கட்டியதோடு, அவரை அவருடைய சீட்டில் வைத்து கட்டி விமான பயணம் முடியும்வரை கட்டி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நியூயார்க்கை சேர்ந்த Andy Ellwood என்பவர் சமூக வலைத்தளம் ஒன்றில் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று முன் தினம் நீயூயார்க்கை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு விமானத்தில் குடிபோதையில் ஒருவர் விமானத்தின் உள்ளே பயங்கர கலாட்டா செய்ததாகவும், அவருக்கு அருகில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகள் பேசி வம்புக்கு இழுத்ததாகவும், இதனால் சக பயணிகள் ஆத்திரமடைந்து, அந்த மனிதரை பிளாஸ்டிக் டேப் வைத்து வாயை கட்டினார்கள். அப்படியிருந்தும் அவருடைய தொல்லை குறையாததால், அவரை அவர் உட்கார்ந்திருந்த
சீட்டில் வைத்து கட்டிப்போட்டனர். சீட்டில் கட்டப்பட்டவாறே அவர் விமானத்தில் 6 மணிநேரம் பயணம் செய்தார்.
விமானம் நியூயார்க் வந்தவுடன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். மேலும் விமானத்தில் அளவுக்கு அதிகமாக மதுபானத்தை விநியோகம் செய்த விமான ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுகுறித்து மேல்விசாரணை நடந்துவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக