டெல்லி மாணவியை ஓடும் பஸ்சில் கற்பழித்து கொலை செய்த ராம்சிங், முகேஷ்சிங், பவன், வினய், அக்ஷய் மற்றும் 17 வயது மைனர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மைனர் மட்டும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான். மற்ற 5 குற்றவாளிகளும் டெல்லி திகார் ஜெயிலில் வைக்கப்பட்டுள்ளனர். கற்பழிப்பு குற்றவாளிகளை மற்ற குற்றவாளிகள் தாக்கி விட கூடாது என்பதற்காக திகார் ஜெயிலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய குற்றவாளியான ராம்சிங் மூன்றாம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
பவன், அக்ஷய் இருவரும் 4-ம் எண் ஜெயிலிலும், வினய், முகேஷ் இருவரும் 7-ம் நம்பர் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 5 பேரும் மற்ற கைதிகள் யாருடனும் பேசுவதில்லை.
சாப்பிடும்போது இவர்கள் 5 பேரும் தங்களுக்குள்ளே பேசி கொள்கிறார்கள். கற்பழிப்பு குற்றவாளிகள் திகார் ஜெயிலுக்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அவர்களது நடவடிக்கைகளும் இதை உறுதிபடுத்துவதாக உள்ளன.
இதையடுத்து கற்பழிப்பு குற்றவாளிகள் 5 பேர் மீதும் இரவு பகல் பாராமல் போலீசார் பார்வை திரும்பி உள்ளது. அவர்களது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக