புதுச்சேரியில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழகத்தில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. புதுச்சேரியில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகிக்கும் சுந்தர வடிவேலு நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து,போராட்டம் கைவிடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக