ஒரே ஒரு ஆசிரியரை கொண்டு இயங்கும் பள்ளிக்கூடங்களை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். அவை ‘ஓராசிரியர் பள்ளி’ என்று அழைக்கப்படுகின்றன. ஆனால், ஒரே ஒரு மாணவனுக்காக மட்டும் செயல்படும் பள்ளி பற்றி இப்போது தெரிய வந்துள்ளது. சீனாவில், பூஜியான் என்ற மாநிலத்தில், இந்த பள்ளிக்கூடம் இயங்குகிறது. 2005–ம் ஆண்டு 24 வகுப்பறைகளுடன், எல்லா பள்ளிக்கூடங்கள் போல்தான் இந்த பள்ளியும் தொடங்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், கொஞ்சம் கொஞ்சமாக மாணவர்களின் வருகை குறையத் தொடங்கியது. 2 வருடங்களுக்கு முன்பு 80
பேர் படித்தனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 17 ஆக குறைந்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பானதுபோல், இப்போது ஹு யாங் என்ற 8 வயது சிறுவன் மட்டுமே அங்கு படித்து வருகிறான். ஆனால், ஒரே சிறுவன் மட்டுமே படிக்கிறான் என்பதற்காக அந்த பள்ளி சோர்ந்து விடவில்லை. வழக்கம்போல் 2 ஆசிரியைகள் அந்த மாணவனுக்கு, அனைத்து பாடங்களையும், முறையான பாடத்திட்டப்படி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். காரணம், கல்வியின்மேல் அவர்களுக்கு உள்ள அக்கறைதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக