திங்கள், ஜனவரி 07, 2013

பேஸ்புக்கின் இலவச தொலைபேசி சேவை !


லண்டன் -  நண்பர்களுடன், அவர்கள் எந்த நாட்டிலிருந்தாலும், இலவசமாக உரையாடக்கூடிய வசதியினை சமூக வலைத்தளமான பேஸ்புக் விரைவில் ஆரம்பிக்க உள்ளது.  பேஸ்புக்கின் ஐபோன் அப்ளிகேசனான மெஸேஞ்சரில் தற்போது இந்த வசதி கனடா நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் வலைத்தளத்தில் இருக்கும் நண்பர்களுடன் எந்த நாட்டிலிருந்தாலும் இலவசமாக பேசிக் கொள்ளலாம். தற்போது ஐபோனில் உள்ள பேஸ்புக் மெஸேஞ்சர் அப்ளிகேசனில், நாம் பேசி அதனைப் பதிந்து குரல் அஞ்சலாக அனுப்பும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மெஸேஞ்சர் அப்ளிகேசனில் உள்ள + குறியினை அழுத்தி நாம் பேசுவதை பதிந்து அனுப்பலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக