சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தக்கூடிய நவீன மென்பொருளை ஈரான் வடிவமைத்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சடூக வலைத்தளங்களில் இஸ்லாத்திற்கு எதிரான தவறான கருத்துகள், ஆபாச படங்கள் பரவுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து ஈரானில் இணையத்தளங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதுடன்,
இவ்வாறான தகவல்கள் பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து ஆராயப்படுமென தெரிவித்தது. இந்நிலையில் ஈரான் காவல்துறை தலைவர் இஸ்மாயில் அகமது முகாதம் கூறுகையில், சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தக்கூடிய நவீன மென்பொருளை வடிவமைத்து வருகிறோம்.

இதன் மூலம் சமூகத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய விசயங்களை கட்டுப்படுத்தலாம்.
தற்போது இந்த மென்பொருளை சோதனை ரீதியாக பயன்படுத்தி வருகிறோம். இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பயனுள்ள தகவல்களை மட்டுமே பெறமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக