இனி "விசாரணை" என்ற பெயரில் பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தக்கூடாது என முதல்வர், பிரகாஷ் சிங் பாதல் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் பாடியாலா மாவட்டத்தில் கடந்த சிலநாட்களுக்கு முன் இளம் பெண் ஒருவர் மர்மகும்பலால் வன்புணர்ச்சி செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரை காவலர்கள் அடிக்கடி காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தியதால் அவர் மிகுந்த அவமானமும் மனவேதனையும் அடைந்தார்.
இதையடுத்து அம்மாநில முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், மாநில டி.ஜி.பி.க்கு பிறப்பித்த உத்தரவில், பெண்கள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தக்கூடாது. புகாரை பெற்றுக் கொண்ட பின் சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்கே, பெண் காவலரை அனுப்பி வீட்டில் வைத்தே விசாரணை நடத்த வேண்டும்.
மேலும், பெண்கள், பெண் குழந்தைகள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் பஞ்சாப் , அரியானா நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.சிக்கிரிக்கு கடிதம் வாயிலாகவும் பாதல் பரிந்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக