டெல் அவீவ்:ஃபலஸ்தீனுடன் அமைதி பேச்சுவார்த்தையை துவக்கி ஒப்பந்தம் செய்யவேண்டும் என்று இஸ்ரேல் அரசுக்கு அதிபர் ஷிமோன் பெரஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெருசலத்தில் தனது வீட்டில் தூதரக பிரதிநிதிகளுடன் பேசுகையில் மேலும் இதுக் குறித்து பெரஸ் கூறியிருப்பது:
ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஒப்பந்தம் செய்துகொள்ள பொருத்தமான நபர். பிராந்தியத்தில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் இஸ்ரேலுக்கு பலன் தர வேண்டுமானால் ஃபலஸ்தீனுடன் அமைதி பேச்சுவார்த்தையை நடத்தி ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும். அரசுக்கு கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். இது கொள்கை தொடர்பான விஷயமல்ல. தற்போதைய சூழ்நிலைகளை புரிந்துகொண்டே இக்கருத்தை நான் கூறுகிறேன்.
இஸ்ரேலை அங்கீகரிக்க தயாரானால் ஹமாஸுடனும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். இவ்வாறு பெரஸ் கூறியுள்ளார்.
பெரஸின் கருத்துக்கு இஸ்ரேலில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் இஸ்ரேல் குடியிருப்புகள் கட்டுவதை தொடரும் நிலையில் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமைதி பேச்சுவார்த்தை முடங்கியது.சட்டவிரோத குடியிருப்புக்களை கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தும் வரை பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என்று அப்பாஸ் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக