செவ்வாய், ஜனவரி 08, 2013

செவ்வாய் கிரகத்தில் உருவாகிறது புதிய நகரம் !

செவ்வாய் கிரகத்தில் 80 ஆயிரம் பேர் தங்கும் வகையில் நகரமொன்று உருவாகிறது. செவ்வாய் கிரகத்தில் சிறு நகரம் அமைக்க முடிவு செய்துள்ளார் பேபால் நிறுவனரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியுமான எலான் முஸ்க். இந்த குடியேற்றம் பற்றி லண்டன் ராயல் ஏரோநாட்டிகல் சொசைட்டியில் பேசிய முஸ்க், செவ்வாய்கிரகத்தில் சைவ உணவுப் பிரியர்களுக்கு மட்டும்தான் அனுமதி. அங்கு முதலில் குடியேறுவோர், தாங்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார். இதற்காக செவ்வாய் கிரகத்தில் செங்குத்தாக தரையிறங்கக்கூடிய விண்கலங்களை தயாரிக்க வேண்டியுள்ளது.
அத்துடன் விண்கலங்களை மீண்டும் மீண்டும் பயணத்துக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த வசதிகளுடன் கூடிய "பால்கன்-9" என்ற விண்கலத்தை நாசா தயாரித்து வருகிறது.
செவ்வாய் கிரகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 80000 பேர் குடியேறுவார்கள். அவர்கள் அங்கு சுயசார்புள்ள புதிய நாகரிகத்தை உருவாக்குவார்கள் என்றும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
இதற்கிடையே செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கான கட்டணம் 5 லட்சம் அமெரிக்க டொலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக