டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 75 ரூபாயும் உயர்த்தலாமா என மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் போன்ற பெட்ரோலிய பொருட்கள் விற்பனையில் மத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசு வழங்கும் மானியம் மூலம் இந்த இழப்பீடு சரிகட்டப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன. கச்சா எண்ணெயின் சர்வதேச விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் டீசல் விலை நிர்ணயத்தையும் எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் 10 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு வருவதாகவும், இதனை சரிகட்ட அதன் விலையை லிட்டருக்கு 2 முதல் 3 ரூபாய் வரையிலும், அதேபோன்று சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ. 50 முதல் 75 வரை உயர்த்தலாமா என மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும்,
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக