செவ்வாய், ஜனவரி 08, 2013

“அரசு” என்ற வார்த்தையை முதன்முறையாக பயன்படுத்துகிறது பாலஸ்தீனம் !

ஐ.நாவில் அந்தஸ்து வழங்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து ஆவணங்களிலும் பாலஸ்தீன அரசு என்ற வார்த்தையை பாலஸ்தீனம் பயன்படுத்த தொடங்கியுள்ளது. பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், கடவுச்சீட்டு, அடையாள அட்டைகள், ஓட்டுநர் உரிமம், அஞ்சல் தலை உட்பட அனைத்து அரசு ஆவணங்களிலும் பாலஸ்தீன நிர்வாகம் என்ற வார்த்தைக்கு பதில் பாலஸ்தீன அரசு என்ற வார்த்தை பயன்படுத்தும்படி அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து பாலஸ்தீன அரசு என்ற உத்தரவாதத்துடன் கூடிய அரசாணையில், ஜனாதிபதி அப்பாஸ் கடந்த 5ஆம் திகதி முதன்முதலாகக் கையொப்பமிட்டார். மேலும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் நாடுகளில், உள்ள தூதரகங்கள் பாலஸ்தீனம் தொடர்பான அனைத்து ஆவணங்களிலும் பாலஸ்தீன நிர்வாகம் என்பதற்குப் பதில், பாலஸ்தீன அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி ஐ.நா பொதுக்குழுவில் நடந்த வாக்கெடுப்பில், பாலஸ்தீனத்துக்கு 138 நாடுகளின் ஆதரவுடன் உறுப்பினர் அல்லாத நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக