கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அனைத்து மாநில தலைநகர்களிலும் கவன ஈர்ப்பு பேரணி நடத்துவது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ. அஹமது தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை
அமைச்சர் இ.அஹமது , “நாட்டில், 17 சதவீதம் சிறுபான்மையினர் உள்ளனர். இதில், 13.4 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என, ரங்கநாத் மிஸ்ரா குழு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், முஸ்லிம்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்துவோம்.
அமைச்சர் இ.அஹமது , “நாட்டில், 17 சதவீதம் சிறுபான்மையினர் உள்ளனர். இதில், 13.4 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என, ரங்கநாத் மிஸ்ரா குழு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், முஸ்லிம்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்துவோம்.
குஜராத், மகாராஷ்டிரா, உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏராளமான முஸ்லிம்கள் விசாரணையின்றி நீண்ட காலம் சிறை வைக்கப் பட்டுள்ளனர். அற்ப காரணங்களுக்காகவும், காவல்துறைக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்க மறுத்ததற்காகவும், பொய் வழக்குகள் புனையப்பட்டு இவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.. இவர்கள், தீவிரவாதிகள் அல்ல. சிறு, சிறு பிரச்னைகளுக்கு கைது செய்யப்பட்டு, விசாரணையில்லாமல், பல நாட்களாக சிறையில் உள்ளனர்..
கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீதி மறுக்கப்படுகிறது. கடுமையான உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள மதானியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் மாதம், அனைத்து மாநில தலைநகர்களிலும், பேரணி நடத்த உள்ளோம்.
அரசியல் கூட்டணியை பொறுத்தவரை, தமிழகத்தில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியிலும், கேரளத்தில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலும், தொடர்ந்து நீடிப்போம் என்றார்.
நிர்வாகக்குழு கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், கேரள அமைச்சர் பி.கே. குஞ்ஞாலி குட்டி, தேசிய துணைச் செயலாளர் ஆம்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ அப்துல் பாசித் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், டைம்ஸ் ஆஃப் லீக் துணை ஆசிரியர் கே.டி. கிஸர் முகம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக