பெங்களூர்:கர்நாடக மாநிலத்தில் ஆளும் பிஜேபி அமைச்சர்களும் எம்.எல்.ஏ.,க்களும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தங்கள் கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் நன்னடத்தை போதனை வகுப்புகளை நடத்த பிஜேபி முடிவு செய்துள்ளது. இந்த வகுப்புகள் வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில், பெங்களூரில் நடைபெறும்
என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற மாநில உயர்மட்டக் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் 2008-ம் ஆண்டு, பிஜேபி ஆட்சி அமைத்தது முதல் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக சுமத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த வாரம், மூன்று அமைச்சர்கள் சட்டமன்றத்திலேயே தங்கள் செல்போனில் ஆபாசப் படம் பார்த்தது அம்பலமானது. இதையடுத்து, அவர்கள் ராஜிநாமா செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக