புதன், பிப்ரவரி 15, 2012

சம்ஜோதா:குண்டுவைத்தது ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி சவுகான் – என்.ஐ.ஏ !

Samjhauta_bomber_Kamal_Chouhanபுதுடெல்லி:நேற்று முன்தினம் இந்தூரில் கைது செய்யப்பட்ட தலைமறைவு குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி கமல் சவுகான் தான் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டுவைத்தவர் என்று இவ்வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது. ஹரியானாவிலும், மத்திய பிரதேச மாநிலத்திலும் வெடிப்பொருட்களை
கையாளுவது குறித்து சவுகானுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக என்.ஐ.ஏ சிறப்பு வழக்குரைஞர் ஆர்.கே.ஹண்டா கூறினார்.
இவ்வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான சந்தீப் டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா ஆகியோர் சவுகானுக்கு வெடிக்குண்டை நிறுவ உதவியுள்ளனர். நேற்று பஞ்ச்குலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுகானை இம்மாதம் 24-ஆம் தேதி வரை என்.ஐ.ஏ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
2007 பிப்ரவரி 18-ஆம் தேதி நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலோர் பாகிஸ்தானைச் சார்ந்தவர்கள் ஆவர். ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கும், பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவருமான சுனில் ஜோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு சவுகானிடம் என்.ஐ.ஏ முதன்முதலாக விசாரணை நடத்தியது. விசாரணை நடத்தியதில் கூடுதல் சதித்திட்டங்களில் சவுகானுக்கு பங்கிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணைக்கு அழைத்தபோது சவுகான் தலைமறைவானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக