ஞாயிறு, ஜனவரி 15, 2012

எதிர்வரும் காலங்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்யப் போவதில்லை !–மஹிந்தவின் தங்கை நிரூபமா !


இந்திய மண்ணில் இனி கால் வைக்கப் போவதில்லை என ஜனாதிபதியின் சகோதரியும், பிரதி அமைச்சருமான நிரூபமா ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட அல்லது உத்தியோகபூர்வ காரணங்களுக்காக இந்தியாவிற்கு செல்லப் போவதில்லை. அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கணவருக்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.  இதன் காரணமாக இனிமேல் இந்தியாவிற்கு விஜயம் செய்யப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழகத்திற்கு விஜயம் செய்கின்ற போதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுதலைப்புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கையில் தோற்கடித்த காரணத்தினால், ராஜபக்சக்களுக்கு வெளிநாடுகளில் வாழும் தமிழ் புலம்பெயர் மக்களில் சிலர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்யப் போவதில்லை என நிரூபமா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக