ஈரான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள நெய்ஷாபார் என்ற இடத்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.5 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் அப்பகுதியில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி 100 பேர் காயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலநடுக்கம் காரணமாக இந்த பகுதியில் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக