வெள்ளி, ஜனவரி 20, 2012

சல்மான் ருஷ்டின் இந்தியா பயணம் ரத்து ! செருப்படி வாங்காமல் தப்பித்தார்

 சல்மான் ருஷ்டி ஜெயப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவில் கலந்து கொள்ளவில்லை . கடந்த 1998ம் ஆண்டு வெளிவந்த ருஷ்டியின் சேட்டனிக் வெர்சஸ் என்ற நூல் மூலம் முஸ்லிம்களின் மத உணர்வை அவமதித்ததற்காக அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது .இதையடுத்து கடந்த 2000ம் ஆண்டு அவர் பலத்த பாதுகாப்புடன் இந்தியாவுக்கு வந்து சென்றார். கடந்த 2007ம் ஆண்டு முஸ்லிம்களின் எதிர்ப்பையும் மீறி அவர் ஜெயப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டார்.
 
இந்நிலையில் இன்று துவங்கும் இலக்கிய விழாவிலும் குறிப்பிட்டபடி அவர் கலந்துகொள்வார் என்று விழா அமைப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.ஆனால் , ஜெய்ப்பூர் இலக்கியம் விழாவில் கலந்து கொள்ள எதிர்ப்பு அதிகமானதை அடுத்து  சல்மான் ருஷ்டி தனது  பயணத்தை ரத்து செய்துள்ளார்.
 
எழுத்தாளர் சல்மான் ருஷ்டி விழா அமைப்பாளர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.அதில் விழாவில் கலந்துகொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
 
பாதுகாப்பு காரணங்களுக்காக ருஷ்டி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என விழா அமைப்பாளர்கள் கூறியுள்ளனர் . 
முன்னதாக ஒரு இஸ்லாமிய இயக்கம் இந்தியாவிற்கு வரும்  ருஷ்டியை செருப்பால் அடிப்பவருக்கு ஒரு லட்சம் ருபாய் பரிசு அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக