அச்சந்திப்பின் போது ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவாரங்களை சேர்ந்தவர்களை இவ்வழக்கில் குற்றவாளிகளாக்கி சிக்க வைக்க தனக்கு அழுத்தம் தரப்படுவதாக ஹேமந்த கர்கரே கூறியதாக மோகன் பகவத் கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே சுவாமி அசிமானந்தா கைது செய்யப்பட்டதாக கருதும் மோகன் உபி தேர்தலில் சிறுபான்மையினர் ஓட்டுகளை கைப்பற்ற காங்கிரஸ் செய்யும் தந்திரம் என்று கூறியதாக தெரிகிறது.
உச்சநீதிமன்றத்தில் மோகன் பகவத்தின் கருத்தை தேசிய புலனாய்வு அமைப்பின் வழக்கறிஞர் சுட்டி காட்டிய போது நீதிமன்றத்தில் இவ்வழக்கு இருக்கும் போது அதிலும் குறிப்பாக இவ்வழக்கின் குற்றவாளிகளின் ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வர உள்ள நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் கருத்துக்கள் தேவையற்றவை என்றும் அதிகப்பிரசங்கிதனம் என்றும் உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக