- கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம்
கோர்ட் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இதுதொடர்பாக
போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை அரசு வாபஸ் பெற
வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். தமிழகத்தில்
நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் 1000
மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு வ
ருகிறது. முதல் அணு உலையில் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. ஆனால்
இன்னும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை. ஏப்ரல் மாத இறுதிக்குள்
மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என பிரதமர் மன்மோகன்சிங், கடந்த மாதம்
ரஷ்ய அதிபரிடம் உறுதி அளித்திருந்தார். இருப்பினும் அந்தக்
காலக்கெடுவுக்குள் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.
இதற்கிடையே அணு உலைக்கு எதிராக கூடங்குளம் சுற்று பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களுடன் அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. கூடங்குளத்தின் வளர்ச்சி பணிக்காக ரூ.500 கோடி செலவிடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் அணு உலை எதிர்ப்பாளர்கள் சார்பில் கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அணு மின்நிலையத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யாததால் விபத்து ஏற்பட்டால் பெரிய அளவில் நாசம் ஏற்படும் என்றும் மனுவில் கூறப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் தேசிய அணு மின்சக்தி கழகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதன்படி அவர்கள் தாக்கல் செய்த பதில் மனுவில், அணு உலை மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் ஏற்பட்டாலும் அணு உலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கை நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் கொண்ட பெஞ்ச் 3 மாதங்கள் தொடர்ந்து விசாரித்தது. அணு உலையின் பாதுகாப்பு மற்றும் கூடங்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு குறித்து ஆராய நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனினும், அணு மின்நிலைய பணிகளுக்கு தடை விதிக்காமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு விவரம்:
கூடங்குளம் அணு மின்நிலையம் பாதுகாப்பானது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இன்றைய தலைமுறையினருக்கு மட்டும் அல்லாது எதிர்கால தலைமுறையினரின் நலனுக்காக இந்தியாவில் அணுமின்சக்தி திட்டங்கள் செயல்படுத்தப்படுவது மிக அவசியமாகும். கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையம் மற்றும் அதன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 15 நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட் வகுத்துள்ளது.3
திங்கள், மே 06, 2013
கூடங்குளம் அணு உலைக்கு தடையில்லை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக