ஞாயிறு, மே 05, 2013

தூக்குத் தண்டனை:அப்துல் கலாமின் சிபாரிசை உள்துறை அமைச்சகம் மூடி மறைத்தது!...

புதுடெல்லி: தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க அப்துல் கலாம் குடியரசு தலைவராக இருந்த காலத்தில் அளித்த சிபாரிசை மத்திய உள்துறை அமைச்சகம் மூடி மறைத்ததாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அஸ்ஸாமைச் சார்ந்த மகேந்திரநாத் தாஸ் குப்தா அளித்த மனுவை விசாரணைக்கு எடுத்தபொழுது உச்சநீதிமன்றம் இதனை கண்டறிந்தது. இவருடைய தூக்குத்தண்டனையை ரத்துச் செய்யவேண்டுமென்று அன்றைய குடியரசு தலைவரான ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் மத்திய உள்துறை அமைச்சகம் சிபாரிசு அளித்திருந்தார்.
ஆனால், இந்த சிபாரிசை பின்னர் மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசு தலைவராக இருந்த பிரதீபா பாட்டீலிடம் அளிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டறிந்தது. இக்காரணங்களால் தூக்குத் தண்டனை அளிக்க தாமதமானது என்பதை கண்டறிந்த நீதிபதிகளான ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.
ஆனால், உச்சநீதிமன்றத்தின் கருத்தை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. அப்துல் கலாமின் சிபாரிசை பிரதீபா பாட்டீலிடம் சமர்ப்பித்ததாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக