ஞாயிறு, மே 05, 2013

கூண்டில் அடைபட்டது புலியா? பூனையா?

ராமதாசை கைது செய்து ரவூடிச  அரசியலுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.  

ராமதாஸ் கைது: மும்பை  பால்தாக்ரே போல் தான் கண் அசைத்தால் என்ன நடக்கும் தெரியமா? என்று வீர வசனம் பேசிய ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

கலவரம்: ராமதாஸ் கைது செய்யப்பட்டதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் வட தமிழகம் எங்கும் கலவரத்தில் ஈடுபட்டனர். 

பாலம் தகர்ப்பு: மரங்களை வெட்டி சாலைகளில் போட்டு பொது அமைதியை கெடுத்தனர். திண்டிவனத்தில் இருந்து புதுவை போகும் வழியில் உள்ள ஒரு பாலத்திற்கு வெடிவைத்து தகர்த்தனர். 

பஸ் உடைப்பு மற்றும் தீக்கிரை: ராமதாஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இதுவரை 3 பஸ்களை தீவைத்து கொளுத்தி உள்ளனர். இதுவரை 200 க்கும் அதிகமான பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. 

பெட்ரோல் குண்டு வீச்சு: மேலும் திருவண்ணாமலை அருகில் 50 புதிய டூ வீலர் வாகனங்களை ஏற்றி வந்த வெளிமாநிலத்து கன்டெய்னர் வாகனத்தை  பெட்ரோல் குண்டை வீசி தாக்கி உள்ளனர்.  இதில் வாகனம் தீக்கிரை ஆகி அதன் ஓட்டுனர் படுகாயம் அடைந்து கவலைக்கிடமாக உள்ளார். 

கருணாநிதியின் கேடுகெட்ட அறிக்கை: பாமக தலைவர் ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும், அவர் நாவடக்கம் இல்லாமல் பேசுவது இயல்புதான்; மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும். பாமகவினர் நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.  சிங்கள பேரினவாதம் ஈழமக்களை கொல்லும் இப்படி பேசித்தான் அரசியல் நடத்தினார்.

கருணாநிதிக்கு கண்டனம்: ராமதாசுக்கு நாவடக்கும் இல்லாமல் பேசுவது இயல்புதானாம், ராமதாஸின் நாவடக்கம் இல்லாத அடாவாடி பேச்சு அவரோடு நின்றால் பராவயில்லை அது கலவரத்தை உண்டாக்கி உயிர் பழியையும், தீராத பகையையும், பொது சொத்துக்கும் கேடு விளைவித்து இருக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் விட இவர் விசயத்தில் என்ன இருக்கிறது? 

சரியான தண்டனை: வன்னிய மக்களின் அமைதியை கெடுத்து, அவர்களுக்கு நன்மை செய்யப் போகிறேன் பேர்வழி என்று சொல்லி கருணாநிதி மாதிரி தன் குடும்பத்தை வளர்க்கும் ராமதாசுக்கு இது சரியான தண்டனைதான். இவர் வன்னிய சமூதாய மக்களை மேம்படுத்துவதற்கு பதிலாக அந்த சமூகத்தின் பெயரை சொல்லி  தன் குடும்பத்தை மேம்படுத்தி இருக்கிறார். இதுபோன்ற தலைவர்களை மக்கள் புறம்தள்ள வேண்டும். 

மேடையில் வாய் சொல் வீரராக வீர வசனம் பேசினார் ராமதாஸ் இப்பொழுது உள்ளே அடைபட்டதும் அம்மாவை எதிர்த்து ஒரு கருத்து கூட சொல்ல துப்பில்லை.  போதாதற்கு போலீஸ் அதிகாரிகள் கொடுத்த தவறான தகவலால்தான் அம்மா இப்படி செய்திருக்கிறார் என்று புலம்பி இருக்கிறார். கூண்டில் அடைபட்டது  புலி இல்லை பூனை என்பதை நிரூபனமாகி இருக்கிறது. 

நன்றி : சிந்திக்கவும் 

1 கருத்து: