சிரியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பனையாஸ் நகரில் சன்னி முஸ்லிம்கள் குறைவான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் பழங்குடியினரான அவர்கள் மீது அதிபரின் படைகள் படுகொலைகளை அரங்கேற்றி வருகின்றது.
ராணுவம் மற்றும் அதிபரின் ஆதரவாளர்கள் படை இங்கு நடத்திய வேட்டையில் சன்னி பழங்குடியினர்களின் 14 குழந்தைகள் உள்பட 77 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் சடலங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
முன்னதாக சன்னி பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பைதா பகுதியில் நடந்த படுகொலையில் 72 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வாரத்தில் அரசுப்படையினர் நடத்திய இரண்டாவது மிகப்பெரிய படுகொலை இது என்று சொல்லப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக