நியூயார்க்: பிரசவத்திற்கு தயாராக இருந்த தாய் விபத்தில் மரணமடைந்துவிட பிறகு குழந்தை பிறந்து ஆரோக்கியமாக இருக்கும் சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் வாழும் இளம்தம்பதியர், தலை பிரவசவத்திற்காக மருத்துவமனைக்கு ஒரு டாக்சியில் சென்றனர். டாக்சி மருத்துவமனையை நெருங்கிக்கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த வாகனம் மோதியதில் டாக்சி விபத்துக்குள்ளானது.
இதில் தம்பதியினர் இருவரும் தூக்கி வீசப் பட்டனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டாக்சி ஓட்டுனர் உட்பட மூவரையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் தம்பதியினர் இருவரும் ஏற்கனவே மரணித்துவிட்டதாகக் கூறிய மருத்துவர்கள். மரணித்த பெண்ணுக்கு சர்ஜரி மூலம் குழந்தையை வெளியே எடுத்தனர்.
பிறந்த ஆண் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும். தற்போது இன்குபேட்டரில் பாதுகாப்பாக பராமரித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் டாக்சி மீது மோதிய வாகன ஓட்டுனரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக