இந்திய - மியன்மார் எல்லை பகுதியில் இன்று காலை உள்ளூர் நேரம் 07.11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தினால் இதுவரை சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. இந்தியாவின் வடகிழக்கு பிரதேசங்களான மேகாலயா, நாகலாந்து, ஆகிய மாநிலங்களில் இந்நிலநடுக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளதுடன், அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களிலும் இலேசாக உணரப்பட்டுளது. ஒரு சில வினாடிகள் நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம், மியன்மாரின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மாண்டலாயில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20க்கு மேற்பட்டோர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக