சர்ச்சைக்குரிய கிழக்கு சீன கடற்பகுதியில் உள்ள தீவுகள் தங்களுக்கு தான் சொந்தமென கூறி ஜப்பானும், சீனாவும் அடிக்கடி மோதிக் கொள்கின்றன. இதனால் இவ்விரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது. இதற்காக ஜப்பான் இராணுவம் போர் பயிற்சியை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் ஆயுதங்களை அதிகளவில் தயாரிப்பதுடன், வெளிநாடுகளிலிருந்து வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக போர் விமானங்கள், ஏவுகணை தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக இராணுவத்துக்கு அதிக நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அடுத்த பட்ஜெட்டில் இன்னும்
அதிகளவு நிதி வேண்டும் என்று இராணுவ துறை அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதிகளவு நிதி வேண்டும் என்று இராணுவ துறை அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக