வெள்ளி, ஜனவரி 04, 2013

போத்தல் தண்ணீரை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை !

போத்தல் தண்ணீரை விட குழாய் நீரே பாதுகாப்பானது என பிரிட்டன் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் யங்கர் தலைமையிலான குழு கூறுகையில், பொதுவாக குழாய்களில் வரும் தண்ணீரை விட போத்தலில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் குடிநீர் தான் பாதுகாப்பானது என பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குழாய் நீருக்கு எந்த விதத்திலும் போத்தல் தண்ணீர் உயர்ந்தது அல்ல என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக குழாய் நீரில் கலக்கப்படும் குளோரின், போத்தல் தண்ணீரில் இருப்பதில்லை. மேலும் மூடியைத் திறந்தவுடன் சில மணி நேரங்களுக்குள் அந்தத் தண்ணீரை அருந்த வேண்டும்.
இல்லாவிட்டால் நோய்த் தொற்று பரவ வாய்ப்பிருக்கிறது. ஒரே பாட்டில் தண்ணீரை ஒன்றுக்கு மேற்பட்டோர் பயன்படுத்தும்போது அவர்களது கைகள், முகத்திலிருந்து பக்டீரியாக்கள் பரவும்.
மேலும் தண்ணீர் போத்தல்கள் தயாரிக்கப்பட்டவுடன் பயன்பாட்டுக்கு வந்துவிடுவதில்லை. அவை விற்பனைக்கு வருவதற்கு முன்பு சில மாதங்கள் வரை தொழிற்சாலைகளிலோ, விற்பனையகங்களிலோ கிடப்பில் இருக்கும்.
ஆனால் குழாய் நீர் அப்படியல்ல, குழாயில் வரும் குடிநீர் அளவில் அதிகமாகவும், விலையில் குறைவாகவும் இருப்பதால் அது போத்தல் தண்ணீரை விட ஏதோ ஒருவிதத்தில் தரமற்றதாக இருக்கும் என மக்கள் தவறான எண்ணத்தில் உள்ளனர்.
கடந்தாண்டு பல்வேறு இடங்களில் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்ட 40 லட்சம் லிட்டர் குழாய் நீரைப் பரிசோதித்துப் பார்த்த போது, அவை 99.96 சதவிகிதம் தரம் உறுதி செய்யப்பட்டாதக இருந்தது என குடிநீர் பாதுகாப்பு வாரியத்தின் ஆணையர் சூ பெனிசன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக