டெல்லி:எனது மகளின் பெயரை உலகம் அறிய வேண்டும் என டெல்லி பாலியல் வன்முறையில் மரணமடைந்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த மாணவியின் தந்தையான பத்ரி; “இந்த உலகத்திற்கு என் மகளின் உண்மையான பெயர் தெரிய வேண்டும். என் மகள் தவறு எதுவும் செய்யவில்லை, அவள் துணிவுடன் தன்னை தற்காத்துக்கொள்ள கடுமையாக போராடி உயிரிழந்துள்ளாள். நான் அவளை பற்றி பெருமைப்படுகிறேன். எனது
மகளின் பெயரை வெளிப்படுத்தும் போது இதுபோன்ற தாக்குதல்ளை எதிர்கொள்ளும் மற்ற பெண்களும் அவளைப் போன்று வலிமையை கடைப்பிடிப்பார்கள். ” என்று கூறி தனது மகளின் பெயர் ஜோதி சிங் பாண்டே என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக