செவ்வாய், ஜனவரி 08, 2013

ராஜ் தாக்கரே மீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு!



பெட்டியா: மும்பையில் நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு எல்லாம் பீகார் மாநிலத்தவர்களே காரணம் என ராஜ் தாக்கரே கூறியுள்ளமைக்கு அவர் மீது வழக்கு பதிவு செய்ய பீகார் மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பை பெண்கள் மீது நடைபெற்றுவரும் பாலியல் தாக்குதல்கள் மற்றும் வன்கொமைகளுக்கு வெளிமாநிலமான பீகாரிலிருந்து குடியேறியவர்கள்தான் காரணம் என்று மும்பை நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே சமீபத்தில் குற்றம்சாட்டி பேசி இருந்தார். ராஜ் தாக்கரேவின் இந்த பேச்சுக்கு பீகார்
முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பீகார் தலைவர்கள் பலரும் பலத்த எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ராஜ்தாக்கரே மீது தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சித்தாக வழக்குப்பதிவு செய்ய பீகார்றையினருக்கு உத்தரவிட வேண்டும் என சம்பரான் மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி மனோஜ்குமார் சிங், குற்றவியல் சட்டப்பிரிவு 156(111) ன் கீழ் ராஜ்தாக்கரே மீது வழக்குப் பதிவு செய்யும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக